பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் அருளிய
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
(பாயிரம்)
தருணா ருணமணி கிரணா வலிநிகர் தரும க்ஷரமண மகிழ் மாலை
தெருணா டியதிரு வடியார் தெரு மரல் தெளியப் பரவுதல் பொருளாகக்
கருணா கரமுனி ரமணா ரியனுவ கையினாற் சொலியது கதியாக
வருணா சலமென வகமே யறிவொடு மாழ்வார் சிவனுல காள்வாரே.
(காப்பு)
அருணசல வரற்கேற்ற வக்ஷரமண மாலை சாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே.
—நூல்—
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
1. அருணாசலமென வகமே நினைப்பவ ரகத்தைவே ரறுப்பா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
2. அழகுசுந் தரம்போ லகமும் நீயுமுற் றபின்னமா யிருப்போ மருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
3. அகம்புகுந் தீர்த்துன னககுகை சிறையா யமர்வித்த தென்கொ லருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
4. ஆருக் காவெனை யண்டனை யகற்றிடி லகிலம் பழித்திடு மருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
5. இப்பழி தப்புனை யேனினைப் பித்தா யினியார் விடுவா ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
6. ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ யிதுவோ வுனதரு ளருணசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
7. உனையே மாற்றி யோடா துளத்தின்மே லுறுதியா யிருப்பா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
8. ஊர்சுற் றுளம்விடா துனைக்கண் டடங்கிட வுன்னழ கைக்காட் டருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
9. எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி லிதுவோ வாண்மை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
10. ஏனிந்த வுறக்க மெனைப்பிற ரழுக்க விதுவுனக் கழகோ வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
11. ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ தகத்தினீ யிலையோ வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
12. ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா ருன்சூ தேயிது வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
13. ஓங்கா ரப்பொரு ளொப்புயர் வில்லோ யுனையா ரறிவா ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
14. ஔவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை யாளுவ துன்கட னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
15. கண் ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக் காணுவ தெவர்பா ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
16. காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற் கலந்தெனோ டிருப்பா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
17. கிரியுரு வாகிய கிருபைக் கடலே கிருபைகூர்ந் தருளுவா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
18. கீழ்மே லெங்குங் கிளரொளி மணியென் கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
19. குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள் குருவுரு வாயொளி ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
20. கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள் கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
21. கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை யஞ்சலென் றேயரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
22. கேளா தளிக்குமுன் கேடில் புகழைக் கேடுசெய் யாதரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
23. கையினிற் கனியுன் மெய்ரசங் கொண்டுவ கைவெறி கொளவரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
24. கொடியிட் டடியரைக் கொல்லுனைக் கட்டிக் கொண்டெஙன் வாழ்வே னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
25. கோபமில் குணத்தோய் குறியா யெனைக்கொளக் குறையென் செய்தே னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
26. கௌதமர் போற்றுங் கருணைமா மலையே கடைக்கணித் தாள்வா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
27. சகலமும் விழுங்குங் கதிரொளி யினமன சலச மலர்த்தியி டருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
28. சாப்பா டுன்னைச் சார்ந்துண வாயான் சாந்தமாய்ப் போவ னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
29. சித்தங் குளிரக்கதி ரத்தம்வைத் தமுதவா யைத்திற வருண்மதி யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
30. சீரை யழித்துநிர் வாணமாச் செய்தருட் சீரை யளித்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
31. சுகக்கடல் பொங்கச் சொல்லுணர் வடங்கச் சும்மா பொருந்திடங் கருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
32. சூதுசெய் தென்னைச் சோதியா தினியுன் சோதியுருக்காட் டருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
33. செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட் டுருப்படு வித்தைகாட் டருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
34. சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண் ணீராற்றழிவே னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
35. சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா லுய்வகை யேதுரை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
36. சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று சும்மா விருந்தா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
37. சோம்பியாய்ச் சும்மா சுகமுண்டுறங்கிடிற் சொல்வேறென் கதியருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
38. சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே சலியா திருந்தா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
39. ஞமலியிற் கேடா நானென் னுறுதியா னாடிநின் னுறுவே னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
40. ஞானமில் லாதுன் னாசையாற் றளர்வற ஞானந் தெரித்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
41. ஞிமிறுபோ னீயு மலர்ந்திலை யென்றே நேர்நின் றனையென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
42. தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய் தத்துவ மிதுவென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
43. தானேதானே தத்துவ மிதனைத் தானே காட்டுவா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
44. திரும்பி யகந்தனைத் தினமகக் கண்காண் டெரியுமென் றனையென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
45. தீரமி லகத்திற் றேடியுந் தனையான் றிரும்பவுற் றேனரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
46. துப்பறி வில்லா விப்பிறப் பென்பய னொப்பிட வாயே னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
47. தூய்மன மொழியர் தோயுமுன் மெய்யகந் தோயவே யருளென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
48. தெய்வமென் றுன்னைச் சாரவே யென்னைச் சேர வொழித்தா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
49. தேடா துற்றநற் றிருவரு ணிதியகத் தியக்கந் தீர்த்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
50. தைரிய மோடுமுன் மெய்யக நாடயான் றட்டழிந் தேனரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
51. தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியா னட்டமா வேனரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
52. தோடமி னீயகத் தோடொன்றி யென்றுஞ்சந் தோடமொன் றிடவரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
53. நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு ணகையிட்டுப் பார்நீ யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
54. நாணிலை நாடிட நானா யொன்றிநீ தாணுவா நின்றனை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
55. நின்னெரி யெரித்தெனை நீறாக் கிடுமுன் னின்னருண் மழைபொழி யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
56. நீநா னறப்புலி நிதங்களி மயமா நின்றிடு நிலையரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
57. நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட வெண்ணலை யிறுமென் றருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
58. நூலறி வறியாப் பேதைய னென்றன் மாலறி வறுத்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
59. நெக்குநெக் குருகியான் புக்கிட வுனைப்புக னக்கனா நின்றனை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
60. நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ மோசஞ் செயாதரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
61. நைந்தழி கனியா னலனிலை பதத்தி னாடியுட் கொள்நல மருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
62. நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை யந்தக னீயெனக் கருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
63. நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ மாக்கிநீ யாண்டரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
64. பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள் பற்றிட வருள்புரி யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
65. பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள் பாருனக் கார்சொல்வ ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
66. பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள் பித்தந் தெளிமருந் தருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
67. பீதியி லுனைச்சார் பீதியி லெனைச்சேர் பீதியுன் றனக்கே னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
68. புல்லறி வேதுரை நல்லறி வேதுரை புல்லிட வேயரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
69. பூமண மாமனம் பூரண மணங்கொளப் பூரண மணமரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
70. பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன் பெருமையா ரறிவா ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
71. பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப் பேயனாக் கினையென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
72. பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமற் பற்றுக்கோ டாய்க்கா வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
73. பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன் போதத்தைக் காட்டினை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
74. போக்கும் வரவுமில் பொதுவெளி யினிலருட் போராட் டங்காட் டருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
75. பௌதிக மாமுடற் பற்றற்று நாளுமுன் பவிசுகண் டுறவரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
76. மலைமருந் திடநீ மலைத்திட வோவருண் மலைமருந் தாயொளி ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
77. மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி மானமில் லாதொளி ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
78. மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான் வஞ்சியா தருளெனை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
79. மீகாம னில்லாமன் மாகாற் றலைகல மாகாமற் காத்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
80. முடியடி காணா முடிவிடுத் தனைநேர் முடிவிடக் கடனிலை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
81. மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத் தூக்கி யணைந்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
82. மெய்யகத் தின்மன மென்மல ரணையினா மெய்கலந் திடவரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
83. மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்துநீ மேன்மையுற் றனையென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
84. மைமய னீத்தருண் மையினா லுனதுண் மைவச மாக்கினை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
85. மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ நட்டமா டினையென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
86. மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென் மோகந்தீ ராயென் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
87. மௌனியாயக் கற்போன் மலரா திருந்தான் மௌனமி தாமோ வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
88. யவனென் வாயின் மண்ணினை யட்டி யென்பிழைப் பொழித்த தருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
89. யாருமறி யாதென் மதியினை மருட்டி யெவர்கொளை கொண்ட தருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
90. ரமணனென் றுரைத்தேன் ரோசங் கொளாதெனை ரமித்திடச் செயவா வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
91. ராப்பக லில்லா வெறுவெளி வீட்டில் ரமித்திடு வோம்வா வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
92.லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனை பட்சித்தாய் பிராணனோ டருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
93. லாபநீ யிகபர லாபமி லெனையுற்று லாபமென் னுற்றனை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
94. வரும்படி சொலிலை வந்தென் படியள வருந்திடுன் றலைவிதி யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
95. வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென் வாழ்விழந் தேனரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
96. விட்டிடிற் கட்டமாம் விட்டிடா துனையுயிர் விட்டிட வருள்புரி யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
97. வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன் வீடுகாட் டினையரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
98. வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடா துன்னருள் வெளிவிட் டெனைக்கா வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
99. வேதாந் தத்தே வேறற விளங்கும் வேதப் பொருளரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
100. வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா வைத்தெனை விடாதரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
101. அம்புவி லாலிபொ லன்புரு வுனிலெனை யன்பாக் கரைத்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
102. அருணையென் றெண்ணயா னருட்கண்ணி பட்டேனுன் னருள்வலை தப்புமோ வருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
103. சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச் சிறையிட் டுண்டனை யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
104. அன்பொடுன் னாமங்கே ளன்பர்த மன்பருக் கன்பனா யிடவரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
105. என்போலுந் தீனரை யின்புறக் காத்துநீ யெந்நாளும் வாழ்ந்தரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
106. என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென் புன்மொழி கொளவரு ளருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
107. பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப் பொறுத்தரு ளிஷ்டம்பின் னருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
108. மாலையளித் தருணாசல ரமணவென் மாலையணிந்தருள் அருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
———
அருணாசலம் வாழி யன்பர்களும் வாழி
அக்ஷர மண மாலை வாழி.
—o 0 o—
No comments:
Post a Comment